வணக்கம்,
தமிழ் கலாச்சார சங்கம், ஹாங்காங் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (TCA) ஹாங்காங் தமிழ் சமூகத்தில் பண்பாடு, மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக துவங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பு.
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (TCA) ஹாங்காங் சமூக அமைப்புச் சட்டம் அரசாணையின் (Ref. CP/SR/19/02757 11-07-2000 தேதியிட்ட) கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாயகத்தைப் பிரிந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொழி, மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காப்பது தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
இந்த நோக்கத்தை அடைய, கழகம், நாடகத் திருவிழா, குழந்தைகள் தின கொண்டாட்டம், சுற்றுலா, இந்தியப் பிரபலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் (நன்கு அறியப்பட்ட பிரபலங்களின் இசை, பொது, பேச்சு, நடனம், நேரடி நிகழ்ச்சிகள்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் உங்களுக்காக, உங்களால் நடத்தப்படும் ஒரு சமூக அமைப்பு. இதற்கு உடலுழைப்பு மட்டுமன்றி பொருளுதவியும் தேவை. தங்களால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிட முடிந்தால் கழகம் தன் கடைமைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்தும்.
குறைந்த பட்சம் அனைத்து தமிழ் நண்பர்களும், எந்த துறையில் பணிபுரிபவராக இருப்பினும், குறிப்பாக ஹாங்காங்கிற்கு நீங்கள் குறுகிய கால பணியில் வந்திருப்பினும், கழகத்தில் உறுப்பினாராவது உங்களுக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கு உங்களால் ஆன சமுதாயப் பணியாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு எங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
உங்கள் உண்மையுள்ள,
தலைவர்
தமிழ் கலாச்சார சங்கம்
ஹாங்காங் தமிழ் ஓசை நிகழ்ச்சியை கேட்க :